விராட்கோலியின் சாதனையை, பாபர் அசாம் முறியடித்தது எப்படி? : கள விவரம்.

By 
How did Babur Assam break Virat Kohli's record  Domain Details ..

20 ஓவர் உலக கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் 34 பந்தில் 39 ரன் எடுத்தார். 

இதில், 32-வது ரன்னை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ரன்னை எடுத்தார். 62 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார். 

இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 

விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ரன்னை தொட்டிருந்தார். தற்போது, இந்த ரன்னை தொட்ட அதிவேக வீரர் என்ற சாதனையில் பாபர் ஆசம் உள்ளார்.

122 ரன்கள் :

பாபர் அசாம் 62 இன்னிங்சில் 2,507 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.21 ஆகும். ஒரு சதமும், 24 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 122 ரன் குவித்துள்ளார். 

20 ஓவர் போட்டியில், அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் தற்போது 7-வது இடத்தில் உள்ளார். கோலி 3,227 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.

3-வது இடம் :

பாபர் ஆசம் இந்த உலக கோப்பையில் 300-க்கு மேற்பட்ட ரன்னை தொட்டுள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். 

அவர் 6 ஆட்டத்தில் 4 அரை சதத்துடன் 303 ரன் எடுத்துள்ளார். சராசரி 60.60 ஆகும். ஸ்டிரைக் ரேட் 126.25 ஆகும். 

விராட் கோலி 2014 உலக கோப்பையில் 319 ரன்னும், 2016 உலக கோப்பையில் 317 ரன்னும் எடுத்தார்.

பாபர் ஆசம் தனது முதல் உலக கோப்பையிலேயே அதிக ரன் எடுத்து மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். மேத்யூ ஹைடன் 2007 அறிமுக உலக கோப்பையில் 265 ரன் எடுத்திருந்தார்.
*

Share this story