அரைஇறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேறியது எப்படி? : வேர்ல் கப் மேட்ச் விவரம்..

How did England and Australia advance in the semi-finals  World Cup Match Details ..

சார்ஜாவில் நடந்த போட்டியில், இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 

2 பிரிவிலும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

இதில் குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தாம் விளையாடிய 5 போட்டிகளில், தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.

ஆனால், ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. 

ஏற்கனவே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
*

Share this story