டோனியின் சாதனையை, ரிஷப் பண்ட் முறியடித்தது எப்படி?
 

By 
How did Rishabh Pund break Tony's record

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங் :

முதலில் பேட் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்துள்ளது. 

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 85 ரன்னும், கே.எல்.ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 40 ரன்னும் எடுத்தனர்.
 
இந்நிலையில், இந்தப் போட்டியில் 85 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

77 ரன்கள் :

இந்தப்  போட்டியில் ரிஷப் பண்ட் 77 ரன்களைக் கடந்தபோது, தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் (ஒரே போட்டியில்) அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் டிராவிட், டோனி போன்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்தப் பட்டியலில் ராகுல் டிராவிட் 77 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், எம்.எஸ்.டோனி 65 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
 

Share this story