வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது எப்படி?

By 
How did the Pakistan team capture the series by defeating the West Indies

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்தது. 

இதில், டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். 

கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஷதப் கான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அடுத்து களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

இதனால், பாகிஸ்தான் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரான்டன் கிங் அரைசதம் அடித்தும் (67 ரன், 43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பலன் இல்லை.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

முதலாவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.
*

Share this story