இந்த ரணமும், ஏமாற்றமும் இன்னும் எத்தனை நாட்கள் உலுக்கும் என்பது தெரியவில்லை : கேப்டன் ஹர்மன் பிரீத்
 

By 
harman5

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் பேட்டிங் சாதனையை, டிம் சவுத்தி சமன் செய்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார். டோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். 

* 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வந்து 5 ரன் வித்தியாசத்தில் கோட்டை விட்டது. 

இதில் 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (52 ரன், 34 பந்து, 6 பவுண்டரி, ஒருசிக்சர்) அற்புதமான பேட்டிங்கால் வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஓடிய போது, ஹர்மன்பிரீத் ரன்-அவுட் ஆகிப்போனார். 

அதுவும் கிரீசை எட்டும் தூரத்திற்கு வந்து தடுமாறிய அவர் பேட்டை சறுக்கியபடி நீட்டியிருந்தால் தப்பியிருப்பார். அவரது ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கை புரட்டிப்போட்டது. அதன் பிறகு மேலும் சில விக்கெட்டுகள் சரிய ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

இது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிருபர்களிடம் கூறுகையில்,

தோல்வியின் வேதனையால் தவிக்கிறேன். இந்த ரணமும், ஏமாற்றமும் இன்னும் எத்தனை நாட்கள் உலுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், கடைசி பந்து வரை போராடினோம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள முடியும். தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

Share this story