உலகக்கோப்பை கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அதிரடி வெற்றி; ரன்ஸ் விவரம்..

By 
koko4

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயா உலக கோப்பை போட்டி பரபரப்பாக நடந்த நிலையில் இந்திய அணி கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி பவுலர்கள் ஆரம்பம் முதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை ஈட்டியது.

இதையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆடவந்த இந்திய அணி 2 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் நிதானமாக விளையாடி அதிகபட்சமாக 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட ராகுல் பேசும் போது “நான் களத்துக்குள் வரும் போது கொஞ்ச நேரத்துக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடுவோம் எனக் கோலி கூறினார்” என தெரிவித்துள்ளார். நிதானமாக விளையாடிய கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story