ஐசிசி தரவரிசை பட்டியலில், இந்திய இளம் வீரர் முதலிடம்; யார் தெரியுமா?

By 
icc12

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி 20  பந்து வீச்சாளர்களுக்கான  பட்டியலை  ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்   69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் உள்ளார். இந்திய அணி சார்பில் பிஷ்னோய் மட்டுமே டாப் 10- ல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Share this story