புரோ கபடியில், தமிழ் தலைவாஸ் பறித்த முத்தான முதல் வெற்றி : ஆடுகள விவரம்..

By 
In Pro Kabaddi, the first victory of the Tamil Talawas The field details ..

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 

இதில், பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனுடன் மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல், தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், முதல் பாதியில் 18-11 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், சுதாரித்துக் கொண்ட புனே அணியினர் 17-18 என நெருக்கடி தந்தனர். ஆனாலும், தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம், தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
*

Share this story