தென்ஆப்பிரிக்காவில், விராட் கோலியின் செயல்பாடுகள் அசத்தல் : கோச்சர் டிராவிட் 

In South Africa, Virat Kohli's performance was phenomenal Kochhar Dravid

ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்குவதற்கு முன்னர், அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்கவில்லை என்று பிசிசிஐ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த விவகாரத்தில், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறுகையில்,  'கோலியை சுற்றி  நிறைய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது என்பது எனக்கு தெரியும். 

ஆனால், உண்மையை சொல்லப்போனால், மன உறுதியை உயர்வாக வைத்திருப்பது மிகவும் கடினம் அல்ல என்பதை கேப்டன் கோலி வழிநடத்துகிறார். 

நாங்கள் இங்கு (தென் ஆப்பிரிக்கா) வந்த கடந்த 20 நாட்களாக பயிற்சியில் ஈடுபடுவதிலும், அணியுடன் இணைந்து செயல்படுவதிலும் கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார்’ என்றார்.

Share this story