விண்வெளிப் பயணத்தில், இந்திய வம்சாவளிப் பெண் சிரிஷா : குவிகிறது வாழ்த்துகள்

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.
பூர்வீகம் :
விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும், இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான ‘யூனிட்டி 22’ ஐ அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
பிரான்சனுடன் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில், அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா இருக்கிறார்.
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.
முப்பத்தொரு வயதான சிரிஷா பண்ட்லா இந்தியாவில் பிறந்த இரண்டாவது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார்.
பிரபலங்கள் வாழ்த்து :
ஆந்திராவின் தெனாலியில் தனது முன்னோர்களை கொண்ட விண்வெளி பொறியாளர் ஆவார். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.
கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள சிரிஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.