2021 மேட்சில், கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவைப்பட்டது : கே.எல்.ராகுல் 

In the 2021 match, hard work and discipline were required KL Rahul

2021-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் சிறப்பாக அமைந்தது என்று லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

இந்திய அணிக்கு இதுஒரு சூப்பர் ஸ்பெ‌ஷல் ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு, நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறப்பானவை. 

உழைப்பு-ஒழுக்கம் :

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு நிறைய கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். 

சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த நேரத்தில் டிரஸ்சிங் அறைச் சூழல் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி். தொடரின் முதல் ஆட்டத்தில், அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றியை ஒருநாள் கொண்டாடிவிட்டு, மீண்டும் பயிற்சிக்கு திரும்புவோம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்த தொடங்குவோம்.

முன்னிலை :

3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது. 
*

Share this story