டி20 கிரிக்கெட் வரலாற்றில், விராட்கோலியின் புதிய சாதனை..

 

By 
viratrecord

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதன் சொந்த ஊரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கொல்கத்தா 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களை எடுத்தார்.

கொல்கத்தா சார்பில் 3 விக்கெட்டுகளை சாய்த்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். விராட் கோலி அரை சதம் அடித்ததன் மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஐபிஎல், உள்ளூர் என அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து இதுவரை விராட் கோலி மொத்தம் 3015 ரன்களை அடித்துள்ளார்.

இதன் வாயிலாக உலக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:

1. விராட் கோலி : 3015, சின்னசாமி மைதானம், பெங்களூரு, இந்தியா

2. முஸ்திதுர் ரஹீம் : 2989, நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர், வங்கதேசம்

3. முகமதுல்லா : 2813, நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர், வங்கதேசம்

4. அலெக்ஸ் ஹெல்ஸ் : 2749, ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம், இங்கிலாந்து
 

Share this story