டெஸ்ட் மேட்சில், கோலி-ஜோரூட் மோதல் : கலக்கப் போறது யாரு?
 

By 
In the Test match, the goalie-Jorut clash who's going to mix

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து சென்றுள்ளது.

எதிர்பார்ப்பு :

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை 4-ந்தேதி தொடங்குகிறது.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக திறமையுடன் ஆட வேண்டிய நிலை உள்ளது.

காத்திருக்கும் சவால் :

இந்த போட்டிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது. 

சுப்மன்கில் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பயிற்சியின் போது அகர்வால் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. இதனால், அவர் ஆடமாட்டார். எனவே கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடலாம்.

மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ரகானே, ரி‌ஷப்பண்ட் உள்ளனர். புஜாராவின் ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. 

இதேபோல, ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம். அவர் விளையாடாவிட்டால் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ‌ஷமி, இசாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுவார்கள். முகமது சிரா ஜுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

14 ஆண்டுக்குப் பிறகு :

இந்திய அணி கடைசியாக, இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு, ஆடிய 3 தொடரிலும் தோற்இந்தியா கடைசியாக 2018-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, அங்கு தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பிப்ரவரி- மார்ச் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமே. 

ஆனால், அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து இருந்தது. மேலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் ஆடவில்லை.

இரு அணிகளும் நாளை மோதுவது 127-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா29-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி-டென் டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share this story