இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச் : இன்று மூன்றாம் நாள் ஆட்டம்; இதுவரை ரன்ஸ் விவரம்..

testmatch

* இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

முன்னதாக அஸ்வின் 23 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்று, மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

* 10-வது ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழக வீரர்கள் 7 பேர் உட்பட இந்தியாவிலிருந்து 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் 16.98 மீட்டர் தூரத்தை தாண்டி பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Share this story