பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, தங்கம் வென்றது இந்தியா..

ஆடவர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடைபெற்று வருகிறது. ஆடவர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த சவுரவ் கோசல் மற்றும் அபய் சிங் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இன்று இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை இந்திய ஆடவர் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணிஅசத்தியது.
இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் ஜோடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்றனர். இத்துடன் இந்தியா மொத்தம் 10 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.