டெஸ்ட் மேட்ச் தரவரிசையில், இந்தியா-பாகிஸ்தான் நிலை.

India-Pakistan position in Test match rankings

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியா இதுவரை 3 டெஸ்ட் தொடரில், 7 போட்டிகளில் விளையாடி, நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. இரண்டில் டிரா செய்துள்ளது. 

இதன்மூலம், 54 புள்ளிகள் பெற்றுள்ளது. இரண்டு புள்ளிகள் பெனால்டி மூலம் இழந்தது. வெற்றி சாராசரி 64.28 ஆகும். 

இதனால், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணிகளில் முதல் இடம் பிடித்தாலும், தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. 

இலங்கை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 100 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. 

பாகிஸ்தான் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 36 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், 75 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளது.
*

Share this story