ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: விராட் கோலி விலகல்.. ஏன்.?

By 
kohli3

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று  நடைபெறவுள்ளது. இத்தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில்,ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக  ஓய்வெடுத்து வரும் நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். இத்தொடரில் மீண்டும் விராட் கோலி டி 20 அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில்,  இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் டிராவிட் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this story