உலக சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை; யார் தெரியுமா?

By 
preet

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்  மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 -டி20, ஒரு  டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது.

முதலில் டி 20 கிரிக்கெட் அடுத்து டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மும்பையில் நடந்தது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்திய அணி தோற்றாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு (101) கேப்டனாக இருந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

Share this story