நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில், இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு..

Indian team announces Test match against New Zealand

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதிகளிலும், முதல் டெஸ்ட் 25 முதல் 29-ந் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3 முதல் 7-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

கோலி-ரோகித் :

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கோலி பதவி விலகியதால், ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு, 20 ஓவர் தொடரிலும் கோலி ஆடவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

முதல் டெஸ்டில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கோலி 2-வது டெஸ்டில் கேப்டனாக பணியாற்றுவார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடரில், ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்டும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இல்லை. கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீரர்கள் விவரம் :

ரகானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன்கில், ஸ்ரேயாஷ் அய்யர், விருத்திமான் சகா, கே.எஸ்.பரத் (இருவரும் விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
*

Share this story