இந்திய டெஸ்ட் மேட்ச் : நியூசிலாந்து வீரர்கள் அறிவிப்பு

Indian Test match New Zealand players announced

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 

முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 25-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பையில் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. 

சீனியர் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். 

அஜாஸ் பட்டேல், வில் சோமர்வில்லி, மிட்செல் சான்ட்னெர், ரஷின் ரவிந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகிய 5 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் வருமாறு :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹென்றி நிகோல்ஸ், வில் சோமர்வில்லி, டாம் பிளன்டெல் (விக்கெட் கீப்பர்), அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ், ராஸ் டெய்லர், கைல் ஜாமிசன், ரஷின் ரவிந்திரா, வில் யங், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், நீல் வாக்னர்.
*

Share this story