இந்தியா-நியூசிலாந்து மோதல் : கேன் வில்லியம்சன் விலகல்.. புதிய கேப்டனாக டிம் சவுதி..

By 
India-New Zealand clash Kane Williamson resigns, new captain Tim Saudi

டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது .

இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .

முதல் போட்டி :

இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூர் வருகை தந்தது. 

மேலும், டி 20 உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருந்ததால், அவர்கள் தனி விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு வந்தனர். 

இந்த சூழலில், நடப்பு  உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் தகுதிச்சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, உலக கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. 

அதோடு, தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

கேப்டன் டிம் சவுதி :

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஏனென்றால், கான்பூரில் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

இதன்படி, நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story