17-ந்தேதி இந்தியா-நியூசிலாந்து மேட்ச் : தடுப்பூசி போட்ட ரசிகர்களுக்கு அனுமதி

17th India-New Zealand match Vaccinated fans allowed

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை இருபது ஓவர் தொடருக்கு பிறகு, நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

முதல் சர்வதேசப் போட்டி :

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. 

ஜெய்ப்பூரில் 8 ஆண்டுக்கு பிறகு, நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 

இதையொட்டி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திர ஷர்மா கூறுகையில், ‘இந்த போட்டியை ரசிகர்கள் நேரில் பார்க்க மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். 

ஒரு டோஸ் தடுப்பூசி :

அரசாங்கம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

ரசிகர்கள் குறைந்தது கொரோனா தடுப்பூசி ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும். 

அப்போதுதான், அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால், மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றார்.

Share this story