26-ந்தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மேட்ச், திட்டமிட்டபடி நடைபெறுமா?

Will the 26th India-South Africa match go ahead as planned

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி 26-ம் தேதி தொடங்க உள்ளது. 

ஆனால், ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள சூழலில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன. 

இந்த சந்தேகங்களுக்கு, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்  என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. 

இரு அணியில் உள்ளவர்களுக்கும் தினமும் பரிசோதனை நடத்தப்படும் எனவும்  தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவார். ஆனால், கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது எனவும் மருத்துவக்குழு கூறியுள்ளது. 

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story