சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்..

anu1

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதேபோல் ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி, ஜார்ஜியாவின் லூகா கப்லாஷ்விலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷோடியோர்ஜோனை எதிர்கொள்கிறார்.

Share this story