சர்வதேச டென்னிஸ் போட்டி : இன்று, இறுதிப்போட்டியில் மோதும் 'மாஸ்' வீராங்கனைகள்..

iruvar

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), கஜகஸ்தானின் எலினா ரைபகினாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி ரைபாகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

இந்த போட்டியில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரைபகினாவுடன் மோதுகிறார்.
 

Share this story