ஐபிஎல் 2.0 ஸ்டார்ட் : டோனி-ரோகித் நேருக்கு நேர் மோதல்..
 

By 
IPL 2.0 Start Tony-Rohit face to face clash ..

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. 

மே 2-ந் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் நாளை (19-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 
தமிழக நெட்டிசன்கள் இதனை ஐபிஎல் 2.0 என ஆர்வமாய் பதிவிட்டு வருகின்றனர்.

31 ஆட்டங்கள் :

எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ந் தேதியும், எலிமினேட்டர் 11-ந் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ந் தேதி துபாயிலும் நடக்கிறது.

29 ஆட்டங்கள் முடிவில், டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

பிளே ஆப் சுற்று :

ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.

துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. 

அதே நேரத்தில், மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. சென்னை அணியில் காயம் காரணமாக டூபெலிசிஸ், சாம்கரண் விளையாடுவது சந்தேகம்.

Share this story