ஐபிஎல் 'கூலி' : குஜராத் அணிக்கு எதிரான களத்தில், டெல்லி 4 ரன்னில் 'த்ரில்' வெற்றி..

By 
dcdc

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 40ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியில் பிரித்வி ஷா மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும், தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மெக்கர்க் 23 ரன்களிலும், பிரித்வி ஷா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் 5 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து, அக்‌ஷர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். அக்‌ஷர் படேல் அரைசதம் அடித்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசியில் வந்து 26 ரன்கள் எடுக்க, கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 88 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் மோகித் சர்மா அதிகபட்சமாக 73 ரன்கள் கொடுத்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 100ஆவது ஐபிஎல் போட்டியாகும். விருத்திமான் சகா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 39 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அஸ்மதுல்லா உமர்சாய் ஒரு ரன்னில் வெளியேறினார். ஷாருக்கான் 8 ரன்னிலும், ராகுல் திவேதியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மற்றும் ரஷீத் கான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். எனினும், அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சாய் கிஷோர் களமிறங்கினார்.

கடைசி 2 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவ்து ஓவரை ரஷீக் தார் சலாம் வீசினார். இந்த ஓவரில் ரஷீத் கான் ஒரு பவுண்டரியும், சிங்கிளும் எடுத்தார். 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் சாய் கிஷோர் சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக மோகித் சர்மா வந்தார்.

 

 

Share this story