ஐபிஎல் பரபரப்பு: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ 6 விக்கெட்ல வெற்றி..

By 
lakno9

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 39 ஆவது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஷிவம் துபே 66 ரன்கள் எடுத்தார். பின்னர், கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் குயீண்டன் டி காக் களமிறங்கினர்.

இதில், குயீண்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் கேஎல் ராகுல் 16 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினர்.

ஆனால், பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 55 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து சாதனை படைத்தார். மேலும், தனி மனிதனாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லக்னோ முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து லக்னோவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 64 ரன்கள் தேவைப்பட்டது. போட்டியின் 16ஆவது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் 20 ரன்களும், 17ஆவது ஓவரில் 7 ரன்களும்,18ஆவது ஓவரில் 15 ரன்களும் எடுக்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. இதில், 19ஆவது ஓவரை பதிரனா வீசினார். அந்த ஓவரில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முஷ்தாபிஜூர் ரஹ்மான் அந்த ஓவரை வீசினார்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், 2 மற்றும் 3ஆவது பந்தில் பவுண்டரி விளாசினர். ஆனால், 3ஆவது பந்து நோபாலாக அமைந்தது. மீண்டும் வீசப்பட்ட 3ஆவது பந்திலும் ஒரு பவுண்டரி அடித்து லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், 2 மற்றும் 3ஆவது பந்தில் பவுண்டரி விளாசினர். ஆனால், 3ஆவது பந்து நோபாலாக அமைந்தது. மீண்டும் வீசப்பட்ட 3ஆவது பந்திலும் ஒரு பவுண்டரி அடித்து லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 5ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. 4ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 8 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சரிந்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரனா 2 விக்கெட் கைப்பற்றினார். மேலும், தீபக் சாஹர் மற்றும் முஷ்தாபிஜூர் ரஹ்மா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Share this story