ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..

By 
mimi9

10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளது  அணி நிர்வாகம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது.  இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக  கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை  முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வரும் தொடரில் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share this story