ஐபிஎல் ராஜ்ஜியம்: லக்னோவுக்கு எதிரான போட்டியில், மும்பை தோல்வி - ஆடுகள விவரம்..

By 
lak0

ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 48ஆவது லீக் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நேற்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ரோகித் சர்மா, அதிக ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் போதும், வரும் அவரது பிறந்தநாளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார்.

ரோகித் சர்மா பிறந்தநாள்:

2009 ஏப்ரல் 30, 17 ரன் (20 பந்துகள்)

2014 ஏப்ரல் 30, 1 ரன் (5 பந்துகள்)

2022 ஏப்ரல் 30, 2 ரன் (5 பந்துகள்)

2023 ஏப்ரல் 30, 3 ரன் (5 பந்துகள்)

2024 ஏப்ரல் 30, 4 ரன் (5 பந்துகள்) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் 10, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் முதல் பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இஷான் கிஷான் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நேஹல் வதேரா மற்றும் டிம் டேவிட் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

இதில், நேஹல் வதேரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது நபி 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி வரை விளையாடிய டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், நவீன் உல் ஹாக், மாயங்க் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் அர்ஷின் குல்கர்னி 0 ரன்னில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 18 ரன்களில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோய்னில் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டர்னர் 5, ஆயுஷ் பதோனி 6 ரன்கள், நிக்கோலஸ் பூரன் கடைசியில் வந்து 14 ரன்கள் எடுக்க லக்னோ 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியி மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4ஆவது இடத்திற்கு சரிந்தது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story