ஐபிஎல் அடிதடி: மும்பை அணியை மிரள விட்ட சன்ரைசர்ஸ்.! அதிரடி ரன்ஸ் விவரம்..

By 
srsrrr

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது.

இதில், அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 80*, அபிஷேக் சர்மா 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 62 ரன்னும் எடுத்தனர்.

பின்னர், 278 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இந்தப் போட்டி மும்பை அணியில் ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டி. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இஷான் கிஷான் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 26 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு நமன் திர் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸும் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 12 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story