ஐபிஎல் 'வெறி' : லக்னோவை பந்தாடிய ராஜஸ்தான் அணி 8-வது வெற்றி..

By 
lsg77

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ 196 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 76 ரன்கள் எடுத்தார். தீபக் கூடா 50 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

ஜோஸ் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் ஜோடி சேர்ந்தனர். எனினும், ரியான் பராக் 14 ரன்களில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து கேப்டனுடன் துருவ் ஜூரெல் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினார். இதில் ஜூரெல் 31 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று சாம்சனும் தனது 25 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

கடைசி வரை அதிரடியாக விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஜூரெல் 52 ரன்னும், சாம்சன் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்டு உறுதியாகிவிட்டது. இன்னும், ஓரிரு போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர்கள்:

224 vs பஞ்சாப் கிங்ஸ், சார்ஜா, 2020

224 vs கேகேஆர், கொல்கத்தா, 2024

215 vs டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், 2008

197 vs டெக்கான் சார்ஜர்ஸ், ஜெய்ப்பூர், 2012

197 vs லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், லக்னோ, 2024

இதே போன்று, லக்னோ இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விளையாடிய 15 போட்டிகளில் 12ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டவில்லை.

முதலில் பேட்டிங் செய்து லக்னோ தோல்வி அடைந்த ரன்கள்:

197 – ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, 2024

168 – டெல்லி கேபிடல்ஸ், லக்னோ, 2024

162 – கேகேஆர், கொல்கத்தா, 2024

160 – பஞ்சாப் கிங்ஸ், லக்னோ, 2023

159 – குஜராத் டைட்டன்ஸ், மும்பை, வான்கடே ஸ்டேடியம், 2022

 

Share this story