ஐபிஎல் கிரிக்கெட் பரபரப்பு: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக தொடர்கிறாரா ரோகித்?

By 
sharma2

உலகக் கோப்பை முடிந்ததுமே ஐபிஎல் திருவிழா பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது. வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐபிஎல் 17ஆவது சீசன் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக்கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் அறிவுறுத்தியிருந்தது.

அதற்கான கடைசி நாளான 26ஆம் தேதி தான் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை 4 மணிக்குள்ளாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

இதுதவிர டிரேட் முறையிலும் கூட வீரர்களை ஒவ்வொரு அணியும் விலைக்கு வாங்கி வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், லக்னோ அணிக்காக விளையாடிய ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியானது ரூ.15 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு மாற்று வீரராக ரோகித் சர்மாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியதாக தகவல் வெளியானது. மும்பை இந்தியன்ஸ் அணியானது 2013, 2015, 2017, 2019, 2020 என்று 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5 முறையும் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்துள்ளார்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து எந்த வீரரையும் குஜராத் டைட்டன்ஸ் வாங்கவில்லை. உலகக் கோப்பையில் ஜொலித்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தற்போது வரையில் டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சகா, கேஎஸ் பரத், உர்வில் படேல், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஓடியன் ஸ்மித், தசுன் ஷனாகா, ஜெயந்த் யாதவ், பிரதீப் சங்க்வான், முகமது ஷமி, ராகுல் திவேடியா, ஷிவம் மவி, அல்ஜாரி ஜோசஃப், நூர் அகமது, சாய் கிஷோர், ரஷீத் கான், யாஷ் தயாள், ஜோசுவா லிட்டில், மோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கேன் வில்லியம்சன் கடந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி காயம் காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story