ஐபிஎல் பரபரப்பு: தோனி தனது கடைசி போட்டி குறித்த அறிவிப்பு என்ன?

By 
dhonims2

தோனி எப்போதும் எதையுமே எதிர்பார்க்காத நேரத்தில் அறிவிப்பார். 2015-ல் ஆஸி. தொடரின் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

அடுத்ததாக, கடந்த 2020-ம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதவும்” என சொல்லி இருந்தார்.

அந்த வகையில் அவர் ஆடும் தொழில்முறை (ஐபிஎல்) கிரிக்கெட்டின் கடைசி போட்டியும் அமையும். அது இந்த சீசனில் அரங்கேற வாய்ப்புகள் அதிகம். அடுத்த சீசனில் மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் ஆடுவதற்கு இன்னும் மூன்று வாய்ப்புகள் உள்ளது. அதில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான லீக் போட்டி. இந்தப் போட்டியில் தோனி ஆடுவது உறுதி.

மற்ற இரண்டு வாய்ப்புகள் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி. அதற்கு சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டி உள்ளது. அது நடந்தாலும் தோனி தனது கடைசி போட்டி குறித்த அறிவிப்பு எதையும் சொல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். 

எதிலுமே ஹைப் ஏற்றி பார்க்கும் மனோபாவம் கொண்ட நபர் அவர் இல்லை. அடுத்த சீசனில் அவர் சிஎஸ்கே அணியுடன் பயணித்தாலும் அது புது ரோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story