ஐபிஎல் கெத்து : சென்னை ஆட்டத்தை, ஐதராபாத் இன்று முறிக்குமா? முழிக்குமா?

IPL carving Will Hyderabad break Chennai match today

நடப்பு ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

இன்றைய ஆட்டம் :

புள்ளிகள் பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த போட்டி கூடுதலாக ஒரு வெற்றி என்ற அளவிலேயே இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8-ல் வெற்றிபெற்று பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிபையர் 1-ல் விளையாட முயற்சிக்கும்.

156 ரன்கள் :

கடந்த சீசனில் ஷார்ஜாவில் ஒவ்வொரு அணிகளும் ரன்களாக குவித்தது. ஆனால், இந்த சீசனில் ஷார்ஜா பேட்டிங்கு அவ்வளவு சாதமாக இல்லை. 

இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆர்.சி.பி. 156 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர். அதை சி.எஸ்.கே. சேஸிங் செய்துள்ளது. 

இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

2-வது பகுதி ஆட்டங்களில் இரு அணிகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு அலசல்

ருதுராஜ்-டு பிளிசிஸ் :

சென்னை அணியை பொறுத்தவரைக்கும், 2-வது பகுதி ஆட்டத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தொடக்க பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ்தான். 

மும்பைக்கு எதிராக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனிஒருவராக நின்று 88 ரன்கள் விளாசினார். இவரது அதிரடியால் சி.எஸ்.கே. 156 ரன்கள் குவித்தது.

டோனியின் ஆட்டம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாவிட்டாலும், சிறந்த கேப்டன்ஷிப்பில் அசத்துகிறார்.

வேட்டு :

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொறுத்த வரையில், இந்த சீசன் அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை. 10 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இதனால், பிளே-ஆப் சுற்றை விட்டு வெளியேறிவிட்டது. இனிமேல், ஐதராபாத் அணி பெறும் வெற்றிகள் எதிரணிக்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

ஐதராபாத் கேப்டன் வார்னரை மாற்றியது. வீரர்களை மாற்றியது. எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக வார்னரை அணியில் இருந்து தூக்கிவிட்டு ஜேசன் ராயை களம் இறக்கியது. 

ஐந்து தொடர் தோல்விக்குப்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது.

Share this story