ஐபிஎல் 'கூலி' : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரூ 47 ரன்னில் ஹேப்பி; ஆடுகள விவரம்..

By 
rcppp

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரிஷப் பண்டிற்கு விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டார்.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்‌ஷர் படேல் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டூப்ளெசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய விராட் கோலி 27 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு ரஜத் படிதார் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி ரன்கள் குவிக்க, ஆர்சிபி ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதில், படிதார் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 41 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு ரன் ரேட் குறைந்தது. மகிபால் லோம்ரார் 13 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0, ஸ்வப்னில் சிங் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் கேமரூன் க்ரீன் 32 ரன்கள் எடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, ரஷீக் தர் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இம்பேக்ட் பிளேயரான வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜாக் பிரேசர் மெக்கர்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா 2 ரன்னில் வெளியேற, ஷாய் ஹோப் 29 ரன்களில் நடையை கட்டினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் அக்‌ஷர் படேல் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். கடைசியில் அவரும் 39 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்களாக சலாம் 10, குல்தீப் யாதவ் 6, முகேஷ் குமார் 3 ரன்னில் ஆட்டமிழக்கவே கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

அதுமட்டுமின்றி கடைசியாக விளையாடிய 5 போட்டியிலும் ஆர்சிபி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 3ஆவது அணியாக வெளியேறியிருக்கும்.

அதுமட்டுமின்றி கடைசியாக விளையாடிய 5 போட்டியிலும் ஆர்சிபி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 3ஆவது அணியாக வெளியேறியிருக்கும்.

 

 

Share this story