ஐபிஎல் கூலி : ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி.! முழு விவரம்..

By 
raj8

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 64ஆவது லீக் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய டெல்லி கேபில்ஸ் 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

இதில், அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 58 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அர்ஷத் கான் ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர், கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக அர்ஷத் கான் அதிரடியாக விளையாடவே லக்னோ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி வரை போராடியும் லக்னோ 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. எனினும், ஒரு சதவிகித வாய்ப்பு மட்டுமே லக்னோ அணிக்கு உள்ளது.

இதே போன்று, இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் மைனஸில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு 2 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

இந்தப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. இதில், 2ல் வெற்றி பெற்றாலும், 2ல் தோல்வி அடைந்தாலும் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இதுவரையில், ராஜஸ்தான் விளையாடிய 12 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடைபெற்ற 64ஆவது லீக் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஏனென்றால், இந்தப் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றிருந்தால் லக்னோ 14 புள்ளிகள் பெற்றிருக்கும். கடைசி போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலமாக 16 புள்ளிகள் பெறும். அதோடு ரன்ரேட்டிலும் முன்னேற்றம் அடையும். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.

அதோடு, ஆர்சிபி வெளியேறும் நிலை உண்டாகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கண்டிப்பாக எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இது போன்ற காரணங்களால் சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகள் டெல்லியின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வேண்டுமானால், முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இல்லையென்றால், 2ஆவது பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கும் இலக்கை 18.1 ஓவர்களுக்குள்ளாக அடித்து வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நெட் ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியை விட முன்னிலை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Share this story