ஐபிஎல் கிரிக்கெட்: மாதிரி ஏலத்தில் கோடிகளில் புரண்ட வீரர்கள்.. 17.5 கோடி வரை சென்ற 2 பேர்

By 
ipl2024

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெறுகிறது. இந்த மினி எழுத்திற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியினரும் இறுதி கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலம் எவ்வாறு இருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் மாதிரி ஏலம் ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மகன் அனிருத்தா ஆகியோர் இணைந்து நடத்தினார்கள்.

இதில் பல பிரபலங்கள் ஒவ்வொரு அணி சார்பாக பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுத்தார்கள். அதில் எந்த ஸ்டார் வீரர்கள் எத்தனை தொகைக்கு சென்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த, மாதிரி ஏலத்தில் இந்திய வீரர் ஹர்சல் பட்டேலை ஹைதராபாத் அணி தேர்வு செய்தது. 

இதேபோன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்சை கொல்கத்தா எடுத்தது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புருக்கை மும்பை இந்தியன்ஸ் அணி மாதிரி ஏலத்தில் எடுத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பெயர் மாதிரி ஏலத்தில் வந்ததும் ஒவ்வொரு அணி சார்பாக பங்கேற்ற பிரபலங்களும் போட்டி போட்டு வாங்க முயற்சி செய்தனர். ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய டிராவிஸ் ஹெட்டை 17 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கியது.

இதேபோன்று நியூசிலாந்து அணியின் நடு வரிசை பேட்ஸ்மேனும் அதிரடி வீரருமான டாரல் மிச்சலை சிஎஸ்கே அணி 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதேபோன்று உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா பெயர் வந்ததும் மாதிரி ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

இதில் குஜராத் அணி 17 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ரச்சின் ரவீந்திராவை வாங்கியது. இதேபோன்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூரை 5 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை 2 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தானும் ஏலத்தில் எடுத்தது.

இதேபோன்று இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் ஹசரங்காவை 8 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணியும், ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டாக்கை 7.5 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மானை 5 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணியும், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்திஃபிசுர் ரஹ்மானை மூன்றரை கோடி கொடுத்து மும்பையும் நியூசிலாந்து வீரர் லோகி ஃபெகுர்ஷனை 2 கோடி ரூபாய் கொடுத்து ஆர் சி பி அணியும் ஏலத்தில் எடுத்தது. 

இது அனைத்துமே கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நடத்திய மாதரி ஏலத்தில் நிகழ்ந்த முக்கிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் பிசிசிஐ நடத்தப்போகும் மினி ஏலத்திற்கும் தொடர்பில்லை.

 

Share this story