ஐபிஎல் கிரிக்கெட் டுடே 'தர்பார்' : பெங்களூரு மிரட்சி; கொல்கத்தா மிரட்டலான வெற்றி; ரன்ஸ் லிஸ்ட்..

890

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாசினார்.

கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 31 ரன்கள், ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி சார்பில் வனிந்து ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

லாம்ரோர் 18 பந்தில் 3 சிச்கர் உள்பட 34 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 179 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா 3வது வெற்றியைப் பதிவு செய்தது. கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சுயாஷ் சர்மா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 

Share this story