ஐபிஎல் தர்பார் : கொல்கத்தாவை வீழ்த்தி, ஐதராபாத் அசத்தலான வெற்றி; ரன்ஸ் விவரம்..

hydra3

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அடுத்ததாக, ரங்கு சிங் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

பின்னர், ஜகதீசன் 36 ரன்களும், ஷர்துல் தாகூர் 12 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களும், ஆண்டிரே ரூச்சல் 3 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.
 

Share this story