ஐபிஎல் இடி : கொல்கத்தாவை விரட்டி, குஜராத் மிரட்டலான வெற்றி; ரன்மழை விவரம்..

guja33

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

குர்பாஸ் மற்றும் ஆண்ட்ரெ ரசல் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது. பின், 180 ரன்களை துரத்திய குஜராத் டைட்டனஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சாஹா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

இவரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். மற்றொரு வீரரான சுப்மன் கில் 49 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 11-வது ஒவரில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது குஜராத் டைட்டனஸ். 

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் அடித்து அசத்திய விஜய் சங்கர் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
 

Share this story