ஐபிஎல் களம் : இன்று தெறிக்க விடுவது லக்னோவா? பஞ்சாப்பா?

luc3

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பஞ்சாப் அணியும் அதே நிலையில்தான் உள்ளது. ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 'டோனி கூறும்போது, 'ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம், எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்புக்கு வழிவகை செய்தது. இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது தோல்வியை (8 ஆட்டம்) சந்தித்தது. ராஜஸ்தான் 5வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி 3வது இடத்துக்கு சரிந்தது.

 

Share this story