ஐபிஎல் இறுதிக்கட்டம் : கோப்பையை வெல்லப் போவது சென்னையா? குஜராத்தா? - ரசிகர்கள் பரபரப்பு..

iplcub

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16-வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டி நடைபெற்றது.

இதில், மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னையை களத்தில் சந்திக்க குஜராத் அணியும் குவாலிஃபயர் 2 வெற்றியின் மூலம் தயாராகவுள்ளது.

இதன் மூலம், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 

 

Share this story