ஐபிஎல் இறுதிச்சுற்று : டெல்லி-கொல்கத்தா அணிகள் இடையே இன்று கடும்போட்டி..

IPL final Delhi-Kolkata clash today

கொல்கத்தா டெல்லி ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற, கடுமையாக போராடும் என்பதால், இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2” ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடக்கிறது.

இதில், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2-வது முறையாக :

இந்த போட்டி தொடரில், டெல்லி அணி சிறப்பாக ஆடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-ல் வெற்றி பெற்றது. 4 லீக் ஆட்டத்தில் தோற்றது. 

"குவாலியர் 1” போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியவில்லை.

கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் டெல்லி அணி இருக்கிறது. 

அந்த அணியில் ஷிகர் தவான் (551 ரன்), பிரித்வி ஷா (461), கேப்டன் ரி‌ஷப்பண்ட் (413) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அவேஷ்கான் (23 விக்கெட்), அக்‌ஷர் படேல் (15), ரபடா (13), ஆன்ரிச் நோர்ட்ஜே (10) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

கொல்கத்தா வேட்கை :

கொல்கத்தா அணி 3-வது முறையாக, இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

எலிமினேட்டர் ஆட்டத்தில், பெங்களூரை வீழ்த்தியிருந்ததால், அந்த அணி டெல்லியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். 

கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி (383 ரன்), சுப்மன் கில் (381), நிதிஷ் ரானா (370) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், வருண் சக்கரவர்த்தி (14 விக்கெட்), சுனில் நரீன் (14), பெர்குசன் (12) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

Share this story