ஐபிஎல் நெகிழ்ச்சிகள் : சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்த சிஎஸ்கே வீரர்கள்; டோனியிடம், கவாஸ்கர் ஆட்டோகிராப்..

csk333

ஐ.பி.எல். தொடரில், முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். டேவன் கான்வே 30 ரன்னும், ஜடேஜா 20 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்து வென்றது. நிதிஷ் ராணா 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார். சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் தோற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்தபின் கேப்டன் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட சென்னை அணியினர் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது டென்னிஸ் பந்துகளை ரசிகர்களை நோக்கி அடித்தனர். சென்னை வீரர்கள். சென்னை அணியின் ஜெர்சியையும் வீசினர்.

வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர், டோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கினார். மைதான பராமரிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு எம்.எஸ்.டோனி நன்றி தெரிவித்தார்.


 

Share this story