ஐபிஎல் வெறி: ரோகித் சாதனை முறியடிப்பு; ஒரு கேப்டனாக சாதனை படைத்த சஞ்சு சாம்சன்..

By 
ssan

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 24ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி 3 ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து கொடுத்தனர்.

இதில், ரியான் பராக் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் தான் ஒரு கேப்டனாக தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கேப்டனாக 50ஆவது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ரோகித் சர்மா 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்துள்ளது. இந்த சாதனையை சஞ்சு சாம்சன் தற்போது முறியடித்துள்ளார்.

ஒரு கேப்டனாக 50ஆவது ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

68* (38) – சஞ்சு சாம்சன் (RR) vs GT, 2024*

59 (46) – கவுதம் காம்பீர் (KKR) vs RCB, 2013

65 (48) – ரோகித் சர்மா (MI) vs DC, 2016

45 (33) – டேவிட் வார்னர் (SRH) vs DC, 2021

டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக முறை 50+ ரன்கள் எடுத்தவர்கள்:

25 – சஞ்சு சாம்சன் (131 இன்னிங்ஸ்)*

24 – ஜோஸ் பட்லர் (76 இன்னிங்ஸ்)

23 – அஜிங்க்யா ரஹானே (99 இன்னிங்ஸ்)

16 – ஷேன் வாட்சன் (81 இன்னிங்ஸ்)

9 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (42 இன்னிங்ஸ்)
 

Share this story