ஐபிஎல் 'கெத்து' : வரலாற்று சாதனை படைத்தார் விர்ர்ராட் கோலீ...

vrec

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி- குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆர்.சி.பி களம் இறங்கியது.

டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டூ பிளெஸிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஓவரில் ரஷித் கான், நூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீச டூ பிளெஸிஸ், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆர்.சி.பி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஆனால் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் விளையாடினார். அரை சதம் அடித்த அவர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது. ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 

Share this story