ஐபிஎல் அமர்க்களம் : ரஹானே சிக்சர்; சிஎஸ்கே அணியும், ரசிகர்களும் உற்சாகம்..

gyh

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களத்தில் இறங்கின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 158 ரன்கள் இலக்குடன் விளையாடியது. இறுதியில் 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

களத்தில் இறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரமாக விளையாடினார். இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Share this story