ஐபிஎல் டுடே : 32 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி; சென்னை அணி ரன்ஸ்..

By 
rr44

ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. 

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். 

ஜாஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஷிவம் துபே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ருதுராஜ் 47 ரன்னில் அவுட்டானார். 

மொயீன் அலி, ஜடேஜா தலா 23 ரன்கள் எடுத்தனர். இறுதியில், சென்னை அணி 170 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

Share this story