ஐபிஎல் யுத்தம் : மும்பையை தெறிக்க விட்டு, கெத்தாய் நின்றது சென்னை : ஆடுகள பட்டியல்...

dhoni777

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. களத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அணியிலும் அமைதியான சூழலை டோனி ஏற்படுத்தினார்'  ஷிகர் தவான் அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஸ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 ரன்கள், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், மும்பை அணி தடுமாறியது. அடுத்து வந்த கேமரூன் கிரீன் 12 ரன்களும், திலக் வர்மா 22 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

கடைசியில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை. இறுதியில் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 158ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடியது. 

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , கான்வே களமிறங்கினர். தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார், பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

குறிப்பாக, மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர் , 4 பவுண்டரி பறக்க விட்டார். தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார் தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து, ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.சிறப்பாக விளையாடிய துபே 28 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.  இறுதியில் 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. ருதுராஜ் 40 ரன்களும் , ராயுடு 20 ரன்களும் எடுத்தனர் .

Share this story